Saturday, 20 May 2017

தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை

 தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை

முட்டையின் வெள்ளைகரு, தேன், மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்ய, புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். வெந்தயம், துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை தேய்த்து தலையை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.
மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் சிறிது எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த விழுதை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
மாதுளை சாறுடன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் வராது.
வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசும். இதனை போக்க, மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

வசீகர அழகை தரும் ஆரஞ்சு

 வசீகர அழகை தரும் ஆரஞ்சு


ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துயிர் பெறும்.
கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும்.
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் ஆகிய மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளபளப்பாக இருக்கும்.
ஆரஞ்சு சாற்றை மட்டும் பழ பேக்காக முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.
ஆரஞ்சு ஜுஸ் தினமும் குடித்து வரவேண்டும். அவ்வாறு குடிக்கும் போது உடல் சிவப்பாக மாறுவதை காணலாம். நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது.
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தால் ஆரஞ்சு தோல் அரைத்த விழுது, கசகசா விழுது, மற்றும் சந்தனப் பவுடர் இவற்றைகெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும் போது, பருக்கள் வந்த இடத்தில் தடவி வந்தால் வடுக்கள் மறையும்.

முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள்

 முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள்

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
ஆப்பிள் துண்டுகள், கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.
சரும நிறத்தை அதிகரிக்க ஆப்பிள் விழுது, பால் பவுடர், பார்லிபவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீகைக்காய்த்தூள், இதனை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு போய்விடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீகைக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.


தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை

 தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை


துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றை காய வைத்து எண்ணெயில் ஊர வைத்து, அந்த எண்ணெயை தேய்க்கவும்.
கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், முடியை கருமையாக்கும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடி கருமையாகும்.
நல்லெண்ணெயை காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணெயை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீகைக்காய் போட்டு அலசினால் முடி கருமையாகும்.
ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், சிறிது வெந்தய பவுடரை கலந்து தலைக்கு தேய்த்து, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சீக்கிரமே இளநரை நீக்கிவிடும்.
கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் முடியில் உள்ள பிசுபிசுப்பு போய்விடும்.

உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை

 உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை

சில ஆண்கள் சிகரெட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
முகம் வறட்சியினை போக்க, கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
புதினா இலைகளை அரைத்து தடவி விட்டு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் குளித்து வந்தால் முகம் மற்றும் மேனி கருமை நிறம் குறைந்து பளபளப்பாகும்.
புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.
இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.
சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். முகத்தில் தடவி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் முகத்திலுள்ள கருப்புத் திட்டுகள் மாயமாக மறையும்.

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை

 முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை


தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.
உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், கொத்தமல்லி சாறு சிறிது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட கொத்தமல்லி சாறு, தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய் |NARAMUDIYAI POKKUM NELLIKAI

 நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்


நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
கூந்தல் அழகை பராமரிப்பதில் சிகைக்காய்க்கு முக்கிய பங்குண்டு. இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் இயற்கை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகைக்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும், அழகிற்கும் சிறந்த பொருளாக உள்ளது.
நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து ஒரிஜினல் நிறம் கிடைக்கும்.
ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.
உடல் எடை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் உடலின் கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால் கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலை தருகிறது.
நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தருகிறது.

பொடுகைப் போக்கும் எலுமிச்சை|PODUGAI POKKUM ELUMICHAI

 பொடுகைப் போக்கும் எலுமிச்சை


எலுமிச்சையில் சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே எலுமிச்சையை தேனுடன் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும்.
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும்.
முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை போக்க, எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும்.
தலைக்கு செயற்கை கண்டிஷனர்களைப் பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி அலசி, பின் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசினால், கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.
எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு சிறிது நேரம் முகத்தில் தேய்த்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
எலுமிச்சைக்கு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றும் சக்தி உள்ளது. எலுமிச்சை எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது. எனவே எலுமிச்சை துண்டுகளை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.

கருவளையத்தை நீக்கும் வெள்ளரி |KARUVALAYATHAI POKKUM VELLARI

 கருவளையத்தை நீக்கும் வெள்ளரி

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும்.
வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவ வேண்டும்.
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசிய பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வளையத்தை நீக்க, வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு |SARUMA VARACHIYAI POKKUM URULAI KIZANGU

 சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி, அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
சருமத்திலுள்ள அழுக்குகளை நீக்க, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் 1 முட்டை, சிறிது தயிர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
இளமைத் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
கண்களின் சோர்வை நீக்க, உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்தால், உருளைக்கிழங்கில் உள்ள நொதியானது கருவளையத்தைப் போக்கும்.
தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, முகப்பரு, சரும நிற மாற்றம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.

முகப்பொலிவை தரும் பீட்ரூட்|MUGA POLIVAI THARUM PETRUT

 முகப்பொலிவை தரும் பீட்ரூட்

ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.
பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் சிறிது பார்லி பவுடர் மற்றும் லெமன் ஜுஸ் சிறிது சேர்த்து கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட் | MUGA SIRUKATHAI POKKUM KAYERT

 முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்


இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
கொதிக்க வைத்த கேரட் சாறினை ஆறிய பின் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளபாகும்.

எண்ணெய் பசையை நீக்கும் பூசணிக்காய்|ENNAI PASAYEI POKKUM PUSANIKAI

 எண்ணெய் பசையை நீக்கும் பூசணிக்காய்

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால், கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.
பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமையும்.
முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.
முகப்பருவில் இருந்து விடுபட, பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும். சந்தனப் பொடியை, பூசணிக்காய் கூழுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும்.

கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி |KANNATHAI PALAPALAPAKUM THAKKALI|

 கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி

தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.
சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுதை சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கு தக்காளியின் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் மிருதுவாகும்.
தக்காளி சாறு, தேன் மற்றும் சிறிது சமையல் சோடா இந்த மூன்றையும் நன்றாக கலந்து, பேஸ் மாற்றி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையம் மறையும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.